Rock Fort Times
Online News

தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் பிலிப்பைன்ஸ் மாலுமி தற்கொலை…!

தூத்துக்குடி துறைமுகத்திற்கு  எம்.வி.ஸ்டார் லூரா என்ற நிலக்கரி ஏற்றி வந்த கப்பல் கடந்த 17 ஆம் தேதி வந்தது. துறைமுகத்தில் பெர்த் கிடைக்காததால் துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது.  இந்த கப்பலில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மாலுமி சினம்பன் கிம் ஜோரன் என்பவர் நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து இன்று (20-06-2024) காலை உயிரிழந்த மாலுமியின் சடலத்தை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைப்பற்றி
பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப் பதிவு செய்து மாலுமி உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்