திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சப்பெருமாள்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நெட்டவேலம்பட்டி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சபடுவதாக முசிறி மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உப்பிலியபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட நெட்டவேலம்பட்டி பகுதியில் முசிறி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் செல்லத்துரை தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முத்துசாமி(50) என்பவர் அவரது தோட்டத்தில் கள்ள சாராய ஊறல் போட்டு இருந்தார். அதனை அழித்த போலீசார், அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள்
மற்றும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 லிட்டர் கள்ளச்சாராயதை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து முத்துசாமியை கைது செய்து துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி துறையூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Comments are closed.