ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட விழாக்காலங்களில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க திருச்சி- தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06190) வரும் 11 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரை செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்பட உள்ளது. திருச்சியிலிருந்து மாலை 5.35 மணிக்கு 20 பெட்டிகளுடன் புறப்படும் இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம் திண்டிவனம், மேல்மருத்துவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு பிற்பகல் 12.30 மணிக்குச் சென்றடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு வந்தடையும்.
Comments are closed.