Rock Fort Times
Online News

மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் சிலம்பம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (50), விவசாயியான இவர், நேற்றிரவு தனது தோட்டத்தில் உள்ள ஆடுகளை பட்டியில் அடைக்கச் சென்றார். அப்போது பலத்த காற்று வீசியதால், தென்னை மரத்தின் மட்டை மின் கம்பியில் விழுந்ததில் மின் வயர் அறுந்து பெருமாள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த, புத்தாநத்தம் போலீஸார் பெருமாள் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்