Rock Fort Times
Online News

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு…!

உயர்கல்வித் துறை அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று ( 17.07.2023 ) காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாபேட்டை ஸ்ரீநகர் காலணியிலுள்ள வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல விழுப்புரம் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. பொன்முடி மகன் கவுதம சிகாமணி ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி 2008 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் உள்ள பிடி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் சட்டவிரோதமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களுக்குப் பங்குகளை வாங்கி முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், ஐக்கிய அரபு நாடுகளின் நிறுவனம் ஒன்றில் 55 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அவர் முதலீடு செய்ததாகவும் கூறப்படுகிறது. 2008இல் நடந்ததாக சொல்லப்படும் இந்த விவகாரம் தொடர்பாக இன்று சோதனை நடைபெற்று வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்