தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வாக்காளர்கள் பார்வையிட்டு திருத்தம் செய்யும் பணி கடந்த அக்டோபர் மாதம் 27ல் துவங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் மேற்கொள்ள இம்மாதம், 4, 5ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடந்தது. அதுபோல, வருகிற 18, 19 தேதிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு நேற்று( 13.11.2023 ) தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தது. அதற்கு பதிலாக வருகிற 18ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், வருகிற 18, 19ம் தேதிகளில் நடக்கவிருந்த வாக்காளர் சிறப்பு முகாமை வரும் 25, 26 தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.