திருச்சியில் உள்ள பிரபல தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு: அங்குலம், அங்குலமாக சோதனை…! ( வீடியோ இணைப்பு)
திருச்சியில் உள்ள பிரபல தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஸ்வேதா பாலகிருஷ்ணன் என்ற பெயரில் இந்த இமெயிலானது பள்ளி கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இமெயில் அனுப்பப்பட்டுள்ள ஹோலி கிராஸ் கல்லூரி, கேம்பியன் பள்ளி, சமது மேல்நிலைப்பள்ளி, கேகே நகரில் உள்ள ஆச்சார்யா பள்ளி, புனித வளனார் கல்லூரி உள்ளிட்ட 8 இடங்களில் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவ- மாணவிகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. ஆனால்,
ஹோலி கிராஸ் கல்லூரி இன்று (3-10-2024) வழக்கம்போல செயல்படுகிறது. எனவே, வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள், வெடிகுண்டை கண்டறியும் நவீன
கருவியுடன் கல்லூரியில் அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பிரபலமான பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.