திருச்சி வரகனேரி நடுத்தெருவில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை உடைத்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும், திருச்சி மல்லிகைபுரம் அன்னை நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை இடித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை பா.ஜ.க. பாலக்கரை மண்டல தலைவர் மல்லி செல்வராஜ் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் முன்னிலையில் முற்றுகையிட்டு தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பாஜக நிர்வாகிகள் வேளாங்கண்ணி, ஜெயந்தி வெங்கட்ராமன், சந்தோஷ், வெங்கடாஜலபதி, கேசவபெருமாள், செல்வகுமார், உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் மற்றும் அரியமங்கலம் கோட்ட மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.