Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம்- மேலூர் பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் – மாநகராட்சி ஆணையர் தகவல்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம்-மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் இன்று (17.05.2023 ) மின் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் அந்த பகுதியில் மின்வினியோகம் இருக்காது என்பதால், பின்வரும் பகுதிகளுக்கு நாளை குடிநீர் வினியோகம் இருக்காது. அதன்விவரம் வருமாறு:-

மண்டலம்-1 மேலூர், தேவிபள்ளி, திருவானைக்காவல், பாலாஜி அவென்யூ, பெரியார் நகர், அம்மாமண்டபம், தேவதானம். மண்டலம்-2 விறகுப்பேட்டை, சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, சுந்தராஜநகர், காஜாமலை. மண்டலம்-3 அரியமங்கலம், ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரெயில்நகர், மகாலட்சுமி நகர், முன்னாள் ராணுவத்தினர் காலனி, எம்.கே.கோட்டை, பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யாநகர், மண்டலம்-4 ஜே.கே.நகர், செம்பட்டு, காமராஜ்நகர், எல்.ஐ.சி.காலனி, சுப்பிரமணிய நகர், தென்றல்நகர், வி.என்.நகர், கே.கே நகர், ஆனந்த நகர், கே.சாத்தனூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், கவிபாரதிநகர், எடமலைப்பட்டிபுதூர், காஜாமலை, கிராப்பட்டி, அன்புநகர், ரெங்காநகர், மண்டலம்-5 மங்கலம்நகர், சிவாநகர், உறையூர், பாத்திமா நகர், ரெயின்போநகர், செல்வாநகர், ஆனந்தம் நகர், பாரதிநகர் மற்றும் புத்தூர் பகுதிகளில் உள்ள உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நாளை குடிநீர் வினியோகம் நடைபெறாது. மறுநாள் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இந்த தகவலை திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆா்.வைத்திநாதன் ஐஏஎஸ்  தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்