திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலைய நீர்ப்பணி நிலையத்தில் 12.02.2024 மற்றும் 13.02.2024 ஆகிய இரு தினங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக தில்லைநகர், அண்ணாநகர், காஜாப்பேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்ஷன், கல்லாங்காடு, தெற்கு ராமலிங்க நகர், ஆல்ஃபா நகர், மிளகுபாறை மற்றும் கருமண்டபம் ஆகிய பகுதிகளில் 13 மற்றும் 14 ம் தேதி இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. 15ம் தேதி வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்துக் கொண்டு மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.