ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (17.12.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, வெல்- III மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தர் ராஜ நகர், ஜே.கே. நகர், செம்பட்டு, இபி காலனி, காஜாமலை, ரெங்காநகர், சுப்ரமணிய நகர், வி.என். நகர் , தென்றல் நகர், கவிபாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி, அன்புநகர் , எடமலைப்பட்டிபுதூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், அரியமங்கலம், மலையப்பநகர்,ரயில்நகர், முன்னாள் இராணுவத்தினர் காலனி, மேல கல்கண்டார் கோட்டை, செக்ஸன் ஆபிஸ், நாகம்மைவீதி, நூலக பகுதி, பொன்னேரிபுரம், அம்பேத்கார் நகர், விவேகானந்தர் நகர், எல்ஐசி காலனி, கே.சாத்தனூர், ஆனந்த் நகர், சுப்ரமணிய நகர், கே.கே.நகர், அம்மா மண்டபம், ஏஐபிஇஏ நகர், பாலாஜி அவன்யூ, தேவி பள்ளி, மேலூர், பெரியார் நகர், திருவானைக்காவல், உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர் , சிவா நகர் , புத்தூர் ஆனந்தம் நகர் மற்றும் ரெயின்போ நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் 18.12.2024ம் தேதி ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. 19ம் தேதி அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.