பராமரிப்புப் பணிகள் காரணமாக மதுரை, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில்
மதுரை-ராமநாதபுரம் இடையே ஆகஸ்ட் 5, 6, 8, 9, 11 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மணிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மதுரை – ராமநாதபுரம் இடையே ஆகஸ்ட் 5, 6, 8, 9, 11 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மங்களூரு – கன்னியாகுமரி இடையே காலை 5.05 மணிக்கு இயக்கப்படும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட். 5, 8-ல் திருவனந்தபுரம் வரை இயக்கப்படும். கன்னியாகுமரி – மங்களூரு பரசுராம் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 6, 9-ல் காலை 6.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
இரவு 11.25 மணிக்கு புறப்படும் மதுரை – புனலூர் ரயில் ஆகஸ்ட் 5, 8 தேதிகளில் நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். மறுவழித்தடத்தில் இயக்கப்படும் புனலூர் – மதுரை ரயில் ஆகஸ்ட் 6, 9 தேதிகளில் மாலை 5.15 மணிக்கு நெல்லையில் இருந்து இயக்கப்படும். குருவாயூர் – சென்னை எழும்பூர் ரயில் ஆகஸ்ட் 4, 5, 8, 10 ஆகிய தேதிகளில் திண்டுக்கல், மதுரை செல்லாமல் விருதுநகர், காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்தடையும். சென்னை – குருவாயூர் ரயில் ஆகஸ்ட் 8 ம் தேதி திண்டுக்கல், மதுரை வழியே செல்லாது. மேலும், திருச்சி- காரைக்குடி, மயிலாடுதுறை- செங்கோட்டை, கொச்சுவேலி – மங்களூரு, சென்னை-திருவனந்தபுரம், ரயில்களின் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 939
Comments are closed.