டாக்டர் ராமதாசை சுற்றி இருப்பது துரோகிகள் கூட்டம், அதில் நம்பர்-ஒன் ஜி.கே.மணி தான்…- புயலைக் கிளப்பிய அன்புமணி…!
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளதால் அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், இழந்த ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகின்றன. நாம் தமிழர் கட்சி, தவெக கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. டாக்டர் ராமதாஸ் தரப்பிலான பாமக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே கூட்டணி முடிவை அறிவிக்காமல் உள்ளனர். அன்புமணி தரப்பிலான பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்டது. ராமதாஸ், திமுக அல்லது தவெகவுடன் இணைவார் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க பாமகவில் தந்தை, மகன் அதிகார போட்டி உச்சத்தில் உள்ளது. கட்சிக்கு உரிமை கோரி ராமதாஸ், அன்புமணி இருவரும் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், சென்னையில் இளைஞரணி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், ராமதாஸை சுற்றி சில துரோகிகள் உள்ளனர். அதில் முக்கியமான துரோகி ஜி.கே.மணி. ராமதாஸிடம் பொய், பொய்யாகக் கூறி அவரது மனதை மாற்றுகின்றனர் என்று கூறினார். அவரது இந்த பேச்சு பாமக மத்தியில் புயலை கிளப்பி இருக்கிறது.

Comments are closed.