திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவா் பேசுகையில் :
திருச்சியில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் சர்வதேச விமான நிலைய புதிய கட்டிடத்தை பாரத பிரதமர் வருகின்ற 2ம் தேதி திறந்து வைக்க உள்ளார் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. வடமாநில தொழிலாளர்கள் குறித்து தயாநிதிமாறன் பேசியதற்கு ஒன்று தெரியாமல் சொல்லிவிட்டேன் அல்லது மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினால் அது முடிவுக்கு வந்து விடும் என்றாா். ஏற்கனவே வட மாநில தொழிலாளர்கள் குறித்து நான் பேசியபோது என் மீது எஃப்ஐஆர் போடப்பட்டது. அப்படியானால் நடுநிலையோடு காவல்துறை செயல்பட்டால் தயாநிதிமாறன், டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர வேண்டும் என்றாா். திமுகவின் முகமே இப்படிதான். கடந்த சில வருடங்களாக உத்தரப்பிரதேசத்தை மோசமாக பேசி வந்தனர், ஆனால் பொருளாதார ரீதியாக உத்தரபிரதேச மாநிலம் இரண்டாவது இடத்தில் தற்போது இருக்கிறது. திமுக கண்ணாடியில் தங்களது முகத்தை பார்க்க வேண்டும் மற்ற மாநிலத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது , தமிழகத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதனை ஆராய வேண்டும். ஒரு நிறுவனம் தமிழகத்திற்கு வரும்போது பத்து சதவீதம் கொடுங்கள் 20 சதவீதம் கொடுங்கள் என்று இங்கு உள்ள ஊழலால் தான் தற்போது தமிழகம் பின்னுக்கு தள்ளப்படுகிறது. இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் 7.5 லட்சம் கோடி அதிக கடனை பெற்றுள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசா? இதை அத்தனையும் மறைத்து விட்டு இந்தி கூட்டணியில் இருக்கிறோம் என்றால் முரண்பாடுகள் உள்ள கட்சிகள் எப்படி ஏற்றுக் கொள்ளும்.
புயல் மற்றும் பெருமழையால் சேதமடைந்த நிலையில் மத்திய அரசு கண்டிப்பாக நிவாரணம் வழங்கும். அந்த நிவாரணத்தை வாங்கி மக்களிடம் கொடுத்து விட்டால் எல்லாம் சரி என்று திமுக அரசு நினைப்பது தவறு . நான்கு மாவட்டங்கள் முற்றிலுமாக பொருளாதார ரீதியாக பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
தூத்துக்குடியில் உள்ள உப்பளங்கள் ஏறத்தாழ 90% முற்றிலும் வீணாகிவிட்டது மீண்டும் தூத்துக்குடியில் பழைய நிலைமைக்கு உப்பு உற்பத்தி கொண்டு வர இரண்டு ஆண்டுகள் ஆகும். தற்போது நிவாரணம் கொடுத்தால் போதும் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும் . ஒவ்வொரு மழையும் புயலும் தமிழகத்தை ஆறு மாதம் பொருளாதார ரீதியாக பின்னுக்கு கொண்டு செல்கிறது.தூத்துக்குடியில் பக்கிங்காம் கால்வாய் 120 அடி இருந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வாயிலாக அதனை 20 அடியாக மாற்றியுள்ளனர் . இதனால்தான் பெருவெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வெளியே கொப்பளிக்கிறது. வெள்ளம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால் தூத்துக்குடியில் பக்கிங்காம் கால்வாயை மீண்டும் அகலப்படுத்த வேண்டும். வெள்ளம் ஏற்படும்போது அதனை எப்படி சரி செய்வது என்பதனை யோசிக்காது மத்திய அரசை எப்படி குறை கூறலாம் என்று காலை முதல் மாலை வரை திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
சென்னை வெள்ளம் மற்றும் தென் மாவட்ட வெள்ளத்தால் தமிழக அரசிற்கு படிப்பினை இல்லை எப்படி மத்திய அரசின் மீது பழி போடலாம் என்பதை மட்டுமே யோசித்து வருகிறார்கள் எனக்கூறிய அண்ணாமலை, 2017, 19 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் எந்த ஒரு அரசியல்வாதியும் பண்ணாத செயலை அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் மற்றும் சகாக்கள் செய்தனர். சமூக வலைதள பக்கங்களில் கோ பேக் மோடி என பதிவிட்டனர். தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து கோ பேக் ஸ்டாலின் என பதிவிடுவோம். ஆனால் அவரின் பதவியை கருதி நாகரிகமாக செயல்படுகிறோம். பிரதமர் மோடியின் தமிழக வரவை வரவேற்கும் விதமாக கம் பேக் Come back மோடி என தமிழக மக்கள் பதிவிட வேண்டும். தமிழக முதல்வரை தமிழகத்தில் கேவலப்படுத்த பாஜக விரும்பவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையை விட்டு எங்கு சென்றாலும் ஸ்டாலினுக்கு எதிராக கோ பேக் ஸ்டாலின் என்பதை
எங்களால் ட்ரெண்டிங் செய்ய முடியும். ஆனாலும் அவரின் பதவிக்கு மரியாதை தருகிறோம். தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் எங்கு சென்றாலும் கோ பேக் ஸ்டாலின் என்பதை திமுக it wing ஐ விட 1000 மடங்கு ட்ரெண்டிங் செய்ய முடியும் . இந்த சவாலுக்கு அமைச்சர் TRB ராஜா ஒத்துக் கொள்வாரா? என சவால் விட்டார். பாஜக ஐ.டி விங் சமூகவலைதளங்களில் கம்பு சுற்றுபவர்கள் , எங்களிடம் திமுக iT Wing தனது வேலையை காட்டக்கூடாது என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.