Rock Fort Times
Online News

திருச்சி: குடிநீர் தொட்டியை இடித்த தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் மீது வழக்கு…

திருச்சி வரகனேரி நடுத்தெருவை சேர்ந்தவர் சரவணன். மாநகர தி.மு.க.வர்த்தக அணி அமைப்பாளர். இவரது வீட்டின் அருகே மாநகராட்சி குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி தனக்கு இடையூறாக இருப்பதாக கூறி அந்த குடிநீர் தொட்டியை சரவணனும், மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும் சேர்ந்து இடித்துள்ளனர். இதுகுறித்து திருச்சி மாநகராட்சி வார்டு கமிட்டி அதிகாரியும், உதவி கமிஷனருமான ரவி காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன், திமுக பிரமுகர் சரவணன், கார்த்திக் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். குடிநீர் தொட்டியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வினர் திருச்சி அரியமங்கலம் மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்