புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 16 தொகுதிகளும், திமுகவுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. அதில் ஒரு தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 13 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்தநிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் போட்டியிடும் தொகுதி மற்றும் பெயர் விவரம் வருமாறு:-
வில்லியனூர் –இரா. சிவா
மங்களம் – எஸ். எஸ். ரங்கன்
திருபுவனை – பி. அங்காளன்
பாகூர் – ஆர். ஆர். செந்தில்குமார்
முதலியார்பேட்டை – சம்பத்
உப்பளம் -அனிபால் கென்னடி
உருளையன்பேட்டை -எஸ். கோபால்
நெல்லித்தோப்பு – வே.கார்த்திகேயன்
ராஜ்பவன் – விக்னேஷ் கண்ணன்
காலாப்பட்டு – ஏ. செந்தில் என்கிற ரமேஷ்
கதிர்காமம் – ப. வடிவேலு,
காரைக்கால் தெற்கு – ஏ.எம்.எச். நாஜிம்
நிரவி டி.ஆர். பட்டினம் – எம். நாகதியாகராஜன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.