Rock Fort Times
Online News

ரயிலில் “சிக்கன் ரைஸ்” சாப்பிட்டதால் விளையாட்டு வீராங்கனை உயிரிழந்தாரா?- ரயில்வே நிர்வாகம் மறுப்பு…!

கோயம்புத்தூர் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (40). இவருடைய மகள் எலினா லாரெட் (15). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கூடைப்பந்து வீராங்கனையாகவும் இருந்து வந்தார். இந்நிலையில் பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை நடைபெற்றது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக எலினா லாரெட், சக மாணவிகளுடன் ரயிலில் குவாலியர் சென்றார். பின்னர் போட்டியை முடித்துவிட்டு கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து ரயிலில் சிக்கன் ரைஸ், பர்க்கர் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இது தொடர்பாக எலினா லாரெட் சென்னை அண்ணா நகரில் உள்ள தனது உறவினர் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளார். ரயில் சென்னை வந்ததும், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எலினா பின்னர் பெரவள்ளூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், எலினா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த பெரவள்ளூர் போலீஸார், எலினா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பெரவள்ளூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ரயிலில் வழங்கப்பட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் தான் விளையாட்டு வீராங்கனை உயிரிழந்ததாக தகவல் பரவியது. இதனை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகம் அளித்த விளக்கத்தில், கடந்த 15-ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து கிளம்பிய விரைவு ரெயிலில் பயணித்த கோவையை சேர்ந்த பள்ளி மாணவி எலினா சாப்பிட்டதாக கூறப்படும் சிக்கன் ரைஸ் ஐ.ஆர்.சி.டி.சி விநியோகிக்கும் உணவுப்பட்டியலில் கிடையாது. மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக 139 என்ற மருத்துவ உதவி எண்ணை தொடர்பு கொண்டார். மாணவியை மருத்துவமனையில் அனுமதிக்க பால்ஹர்ஷா ரெயில்நிலையத்தில் டாக்டர்கள் அறிவுரை வழங்கிய நிலையில் அவர் தொடர்ந்து பயணம் செய்ய முடிவு செய்தார் என்று தெரிவித்துள்ளது. எது எப்படி இருந்தாலும் வீராங்கனை இறப்புக்கு காரணம் எது என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த
பிறகே தெரியவரும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது

ஒற்றுமையாக இல்லாவிட்டால் எதிர்கட்சியாகவே இருக்கவேண்டியதுதான் - முன்னாள் அமைச்சர் தங்கமணி காட்டம்..!

1 of 914

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்