திமுக அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…
மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடந்தது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று(01-02-2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் திருச்சி வாழவந்தான்
கோட்டை கடைவீதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ப.குமார் பேசுகையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அற்ற சூழ்நிலை நிலவுகிறது. பட்டியலின மக்களை தொடர்ந்து ஏளனமாக திமுக அரசு பேசி வருகிறது.
பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்திய திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து தான் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆகவே, சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அருணகிரி, பாலசுப்பிரமணியன், தண்டபாணி, எஸ்.பி.பாண்டியன், ராவணன், எஸ்.கே.டி.கார்த்திக், பேரூர் முத்துகுமார், மணப்பாறை சிவசுப்பிரமணியன், வக்கீல்கள் அழகர்சாமி, முருகன், கலைப்பிரிவு ராஜா, அண்ணா தொழிற்சங்கம் கார்த்திக், தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள், அணி களின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.