முதலமைச்சர் விஜய் குறித்து விமர்சனம்: கைது செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு நிபந்தனை ஜாமீன்…!
விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருபவர் மார்க்கண்டேயன். இவர் கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவதூறாகப் பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அவர் தினமும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில் காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.