சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை தீர்க்க மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை -அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு…!
வளைகுடா பிராந்தியத்தில் நடந்து வரும் போரால் இந்தியாவில் சமையல் கேஸ் (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சர்வதேச அளவில் வெளியுறவு கொள்கையில் பாஜக தோல்வியை நோக்கி செல்கிறது என விமர்சனங்கள் எழுகிறது. தெற்காசிய போரால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து பாஜக அரசு சரியாக கையாள்கிறதா என கேள்வி எழுகிறது. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டில் எந்த முயற்சியும் மத்திய அரசு எடுக்கவில்லை. ஆனால், மக்கள் தயாராக இருக்க வேண்டுமென பிரதமர் பீதியை கிளப்புகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.