திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் 3 இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் நடனமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது மட்டுமின்றி இதே பெண்கள் தெருக்களிலும் கவர்ச்சி நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த பலரும் ரயில் நிலையத்தில் நடனமாட எப்படி அனுமதி கிடைத்தது?, அனுமதி கொடுத்தது யார்? என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், குறிப்பாக பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையம் போன்ற பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நடனம் மற்றும் நாடகம் போன்றவை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அனுமதி பெற்று நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள ரயில் நிலையத்தில் நடனமாட அனுமதி பெற்றார்களா? அல்லது அனுமதி பெறாமல் இவர்களாகவே நடனம் ஆடினார்களா? என்பது தெரியவில்லை. நாட்டின் நான்காம் தூணாக கருதப்படும் ஊடகத்துறையினர் ரயில் நிலையங்களில் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்ய முறையாக ரயில்வே காவல்துறை அனுமதி பெற்று அதன்பிறகு தான் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், சாதாரணமாக இந்த பெண்கள் ரயில் நிலையத்தில் எப்படி கவர்ச்சி நடனம் ஆடினார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Comments are closed.