தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் காமினி ஐ.பி.எஸ்., இன்று ( 04.07.2023 ) திருச்சி வந்தார். பின்னர் அவர் திருச்சி மண்டலம் மற்றும் கோயம்புத்தூர் மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர்கள் சுஜாதா, பாலாஜி மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோருடன் திருச்சி ஆயுதப்படையில் உள்ள சமுதாயக் கூடத்தில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், போலீஸ் அதிகாரி காமினி கூறுகையில், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு தமிழக அரசால் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்கள் விவசாயிகளிடம் போதுமான ஆவணங்களை பெற்றுக்கொண்டு நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். அவர்களிடம் கையூட்டு பெறாமலும், விவசாயிகளை காக்க வைக்காமலும் மற்றும் வியாபாரிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என்றும், தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.