துவாக்குடி பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்- சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பள்ளிக் கல்வித்துறை தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும் முன்னர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், தமது தொகுதிக்குட்பட்ட துவாக்குடியில் இருந்து விமான நிலையம் வரை செல்கிற அரை வட்டப் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடி அமைக்கும் பணியில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இன்னும் இரண்டு நாட்களில் மாற்றுக் கட்சியைச் சார்ந்திருக்கின்றவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக கேள்விப்பட்டேன். மாற்றுக் கட்சியாக இருந்தாலும், அவர்களும் எங்க ளுடைய தொகுதி மக்கள் தான் என்கின்ற வகையில், அதை உடனடியாகத் தடுத்து நிறுத்துகின்ற பணியில் நம்முடைய பொதுப்பணித் துறை அமைச்சர், தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
சார்ந்திருக்கின்ற அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கின்ற வேண்டுகோளை வைக்கிறேன் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.