வேலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு அரசு பேருந்து திருச்சி நோக்கி புறப்பட்டது. ராணிப்பேட்டை களத்தூர் பஜனை கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சுந்தரம் (வயது 43) என்பவர் கண்டக்டராக பணியாற்றினார். இந்த பேருந்து இன்று ( 31.10.2023 ) அதிகாலை 3 மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிவிட்ட நிலையில் அருகாமையில் வைத்திருந்த பணப்பையை காணாமல் கண்டக்டர் திடுக்கிட்டார். அந்தபையில் ரூ.15 ஆயிரத்து 799 மற்றும் ரூ.ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 688 மதிப்புள்ள பஸ் டிக்கெட்டுகள், டிக்கெட் வழங்கும் எந்திரம் ஆகியவை இருந்தது. இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் சுந்தரம் புகார் செய்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் வீரசோலை வழக்கு பதிவு செய்து கண்டக்டரின் பணப்பையை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.