Rock Fort Times
Online News

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு…!

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று ( 07.08.2023 ) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த நிலையில் திருச்சியை அடுத்த திருவெறும்பூர் நத்தமாடிபட்டியை சேர்ந்த விவசாயி ஜோசப் என்பவர் தனது நிலத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.


இதனை கண்டதும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடி வந்து அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரின் உடலில் தண்ணீரை ஊற்றிய போலீசார் விசாரணைக்காக செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு கலெக்டர் அலுவலக பிரதான வாயிலில், போலீசார் சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர். அதனையும் மீறி ஒருவர்  தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்