தொட்டியம் அருகே 2 லாரிகள் மோதல்: சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்தது- ஒருவர் பலி…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், தொட்டியம் மணமேடு அருகே இன்று(4-11-2024) தஞ்சாவூருக்கு அரிசி லோடு ஏற்றிச்சென்ற லாரியும், சேலத்துக்கு உப்பு லோடு ஏற்றிச் சென்ற லாரியும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற ஆண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும், மோதிய வேகத்தில் ரோட்டோரம் இருந்த வீட்டில் ஒரு லாரி புகுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த அரிசி லோடு ஏற்றி வந்த நாமக்கல் ராசிபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் லட்சுமணன், கிளீனர் இளையராஜா ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தொட்டியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.