திருச்சிக்கு நாளை ( 06.10.2023 ) விமானம் மூலம் வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டெல்டா மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை காலை 11 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தரும் தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
ஆகவே மாநில, மாவட்ட, மாநகர, தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர,பேரூர், கிளை, வட்ட, வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் கூறியுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.