Rock Fort Times
Online News

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும் …

திருச்சியில் அர்ஜுன் சம்பத் பேட்டி...

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் திருச்சியில் இன்று( 04.07.2023 ) நிருபர்களிடம் கூறியதாவது;-
வருகிற 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அயல்நாட்டு சக்திகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவறாக வழி நடத்துகின்றன. தனபாலை சபாநாயகர் பதவியில் அமர வைத்து அழகு பார்த்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. இந்த சம்பவத்தை தான் மாமன்னன் படத்தில் மாரி செல்வராஜ் காட்சிப்படுத்தியுள்ளார். அவரை பாராட்டுகிறேன். மேகதாது அணை கட்டுவதை தடுக்க ஸ்டாலின் முயற்சி எடுக்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெங்களூருவில் நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தை அவர் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்