திருச்சி, திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). இவர் சம்பவத்தன்று திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் மதுபான பாருக்கு மது அருந்த சென்றார். இதேபோல, அங்கு அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், குருமூர்த்தி, பரணி ஆகிய 3 பேர் மது அருந்த வந்தனர். அப்போது செல்வராஜ், பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் மது குடித்துக் கொண்டிருந்த மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், வாக்குவாதம் கைகலப்பாகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் பீர் பாட்டிலால் செல்வராஜை தாக்கினர்.இதில் செல்வராஜின் மண்டை உடைந்து, பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் பிரசாந்தை போலீசார் கைது செய்தனர். குருமூர்த்தி, பரணி ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
Comments are closed.