Rock Fort Times
Online News

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் ஊழியர்கள் மோதல்….!

டிரைவர் மண்டை உடைந்தது..

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மாநகர பகுதிகளுக்கு மட்டுமின்றி புறநகர் பகுதிகளுக்கும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல, இன்று சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து அரியலூருக்கு ஒரு தனியார் பஸ் புறப்பட தயாரானது. அப்போது நேர பிரச்சனை காரணமாக இந்த தனியார் பஸ் ஊழியர்களுக்கும், மற்றொரு தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், லால்குடி ராமநத்தம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் ரமேஷ்(வயது 49) என்பவரை மற்றொரு தனியார் பஸ் கண்டக்டர் லால்குடி வெள்ளனூரைச் சேர்ந்த ஜனார்த்தனன் (33) சரமாரியாக தாக்கியுள்ளார் .இதில் ரமேஷின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் வழக்குப்பதிவு செய்து ஜனார்த்தனனை கைது செய்தார். இரு தனியார் பஸ் ஊழியர்கள் மோதிக்கொண்ட சம்பவம் சத்திரம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்