Rock Fort Times
Online News

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 15 போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கம்…!

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 15 போலீஸ் அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
அவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

1. க.த. பூரணி, காவல் துணை கண்காணிப்பாளர், சென்னை.

2. பி. உலகராணி, காவல் ஆய்வாளர், திருநெல்வேலி.

3. மா.லதா, காவல் ஆய்வாளர், சென்னை.

4. மு.செந்தில்குமார், காவல் ஆய்வாளர், சேலம் மாவட்டம்.

5. ஜெ.கல்பனாதத், துணைக் காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர்.

6. வே.சந்தானலெட்சுமி, காவல் ஆய்வாளர், திண்டுக்கல்.

7. மா.வசந்தகுமார், காவல் ஆய்வாளர், திருப்பூர் மாவட்டம்.

8. வெ.ஜெகநாதன், காவல் ஆய்வாளர், வடக்கு காவல் நிலையம், திருப்பூர் மாநகரம்.

9. கோ.திலகாதேவி, காவல் ஆய்வாளர், அரியலூர்.

10. இரா.புவனேஸ்வரி, காவல் ஆய்வாளர், நாகப்பட்டினம்.

இதேபோன்று பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக பணியாற்றிய 5 காவல் துறை அதிகாரிகளுக்கு 2025ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் பெயர் விவரம்:

1. மஹேஷ்வர் தயாள், கூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர், சென்னை.

2. ஜெ. மகேஷ், காவல் துறைத் துணைத் தலைவர், நுண்ணறிவு (உள்நாட்டுப் பாதுகாப்பு), சென்னை.

3 நை.சிலம்பரசன், காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி மாவட்டம்.

4. கு. பிரவின் குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை, தலைமையகம், சென்னை.

5. தா.மேரிரஜு காவல் ஆய்வாளர், சென்னை பெருநகர காவல் துறை.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த விருதுகள், தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்