சென்னை போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் பணியாற்றி வந்தார். அவர் இன்று(08-07-2024) கமிஷனர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர், காவலர் பயிற்சி பள்ளி இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவருக்கு பதிலாக சென்னை போலீஸ் கமிஷனராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக இந்த மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Comments are closed.