Rock Fort Times
Online News

திருச்சி-காரைக்கால் ரெயில் சேவையில் மாற்றம்…!

திருச்சி கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் பின்வரும் ரெயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி காரைக்கால் டெமு ரெயில் (வண்டி எண்: 76820) இன்று (ஏப்ரல் 13) முதல் 18-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது, திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயங்கும். மறுமார்க்கமாக காரைக்கால்- திருச்சி டெமு ரெயில் (வண்டி எண்: 76819) மேற்கண்ட தேதிகளில் காரைக்கால்- திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்