திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருவாரூர்- காரைக்கால் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், திருச்சியிலிருந்து காலை 6.50 மற்றும் 8.35 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் வரை செல்லும் டெமு ரயில்கள் (எண்: 06490 மற்றும் 06880) இன்று ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 31ம் தேதி வரை திங்கட்கிழமைகள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் திருச்சியிலிருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல, எதிர் மார்க்கத்தில் காரைக்கால்- திருச்சி டெமு ரயில் (எண்: 60739) காரைக்காலில் இருந்து திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டு செல்லும். இதேபோல் காரைக்கால்- திருச்சி பயணிகள் ரெயில் (எண்: 06457)காரைக்காலில் இருந்து திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருவாரூரில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.