Rock Fort Times
Online News

வரதட்சணையாக நகை, பணம் கேட்டு மனைவியை சித்ரவதை செய்த வங்கி அதிகாரி மீது வழக்கு…!

திருச்சி தில்லைநகர் 11-வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ப்ரீத்தி என்கிற உண்ணாமலை (வயது 32). இவருக்கும் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த கருப்பன் செட்டி ( 36 ) என்பவருக்கும் கடந்த 2022 ம் ஆண்டு திருமணம் நடந்தது. கருப்பன்செட்டி ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். திருமணத்தின்போது ப்ரீத்தியின் பெற்றோர் 46 பவுன் நகைகள், 1.7 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் சீர்வரிசை பொருட்கள்,
ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்தனர். பின்னர் கணவன், மனைவி இருவரும் காரைக்குடியில் சிறிது நாட்கள் இருந்தனர்.
இந்நிலையில் கருப்பன் செட்டி திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து லால்குடியில் கணவன்,மனைவி இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நாளடைவில் மனைவியை, கருப்பன் செட்டி கூடுதல் வரதட்சணையாக நகை, பணம் கேட்டு துன்புறுத்தியாக கூறப்படுகிறது. இதற்கு அவரது தந்தை சிதம்பரம் தாய் சீதாலட்சுமி ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ப்ரீத்தி புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜராஜேஸ்வரி, வங்கி அதிகாரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்