Rock Fort Times
Online News

பாஜக நிர்வாகியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு…!

திருச்சி பாலக்கரை எடத்தெரு நெய்க்கார தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 43). கேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவரான இவர் அப்பகுதி 33-வது வார்டு பா.ஜ.க. தலைவராக உள்ளார். அங்குள்ள ஒரு வீட்டின் தரைதளத்தில் வசித்து வருகிறார். முதல் தளத்தில் அருண்குமார் என்பவர் வசிக்கிறார். இந்தநிலையில் மேல்மாடிக்கு கண்ணனின் தாயார் சென்றபோது அருண்குமார் தடுத்து நிறுத்தினார். இது தொடர்பாக கண்ணனுக்கும், அருண்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் மற்றும் நண்பர்கள் 2 பேர் சேர்ந்து கண்ணனை கத்தியால் குத்தினர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து பாலக்கரை போலீசில் கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமார் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்