பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது வழக்கு: கட்சியில் இருந்து தூக்கினார் சீமான்…!
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 32). நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர், பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் கந்திகுப்பம் போலீசார்
விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சிவராமன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் சிவராமனை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி தொகுதியைச் சேர்ந்த கா.அ. சிவராமன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டுள்ளார். இதனையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது. நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.