திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் கேபிள் வயர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…!(வீடியோ இணைப்பு)
திருச்சி, திருவெறும்பூர் முல்லைவாசல் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பல்வேறு தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் கேபிள் வயர்கள் கட்டப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று( ஏப்ரல் 18) இரவு எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு கேபிள்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் திருவெறும்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கேபிள் வயரில் பற்றி எரிந்த தீயில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தக்க நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று இரவு அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Comments are closed.