இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி கிழக்கு, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி யூத் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகியவை இணைந்து இன்று(25-01-2025) ரத்ததான முகாமை நடத்தின. இந்த முகாம், திருச்சி எஸ்.ஆர்.சி.கல்லூரி அருகே உள்ள ஸ்ரீஸ்ருதி மஹாலில் நடந்தது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி கிழக்கு தலைவர் கே.சுப்பிரமணியன் முகாமிற்கு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பி.சங்கர் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி மாவட்ட தலைவர் மற்றும் இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஜி.ராஜசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முகாமை ராக்போர்ட் டைம்ஸ் வார இதழ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர். லெக்ஷ்மிநாராயணன், கௌரவ விருந்தினர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஒய்ஆர்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் பலர் ஆர்வமுடன் வருகை தந்து ரத்த தானம் செய்தனர்.
இந்த முகாமில், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் (பொறுப்பு) டாக்டர். எஸ்.சாந்தி, ஒய்.ஆர்.சி. திருச்சி மாவட்ட அமைப்பாளர் ஆர்.குணசேகரன், ஐஆர்சிஎஸ் திருச்சி மாவட்ட செயலாளர் ஹாஜி எம்.ஜவஹர்ஹசன், மாவட்ட பொருளாளர் டாக்டர். ஆர். இளங்கோவன், ஐஆர்சிஎஸ் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஹாஜி. ஏ.ஆர். முகமது அபுபக்கர் சித்திக், துணைத் தலைவர் டபிள்யூ. எட்மண்ட் வில்லியம், இணை செயலாளர் பி. முகமது இப்ராஹிம், பொருளாளர் இளஞ்செழியன், யோகா ஆசிரியர் விஜயகுமார், பத்திரிகையாளர் நவீன், சமூக ஆர்வலர் அய்யாரப்பன், கன்மலை அறக்கட்டளை நிர்வாகி எடிசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரத்த தான குழு இயக்குனர் எஸ்.சுஜிதா நன்றி கூறினார்.
Comments are closed.