Rock Fort Times
Online News

மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்களைப் பெற நாளை முதல் பயோமெட்ரிக் கட்டாயம்..!

மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்களைப் பெற நாளை முதல் பயோமெட்ரிக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இதன்பின்னர் மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் பெற முடியாது. இந்த செயல்முறையை முடிக்கவில்லை என்றால் சிலிண்டரை முன்பதிவு செய்வதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகளில் மோசடியை தடுக்கவும், மானியங்கள் சரியான பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்யவும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இ-கே.ஒய்.சி. சரிபார்ப்பை கட்டாயமாக்கியுள்ளன. இதுவரை இந்த செயல்பாட்டை முடிக்காதவர்கள் இன்று(30-09-2026) மாலைக்குள் முடித்துக்கொள்ள இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், இ-கே.ஒய்.சி. செயல்பாட்டை இதுவரை 90% சதவீத வாடிக்கையாளர்கள் முடித்துள்ளனர். மீதமுள்ள 10% சதவீத பேர் மட்டுமே பாக்கி உள்ளனர். இது அத்தியாவசியம் என்பதால் விடுபட்ட வாடிக்கையாளர்களும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்