Rock Fort Times
Online News

திருச்சி, பாரதிதாசன் பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவுகளில் குளறுபடி – தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகத்தலைவர் பகீர் !

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மூலம் 2023 ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் பி. டேவிட் லிவிங்ஸ்டன் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள 2023 நவம்பர் பருவத் தேர்வு முடிவுகளில் பல்வேறு குழப்பங்ளும், குளறுபடிகளும் நிறைந்துள்ளன. குறிப்பாக பல மாணவர்களுக்கு ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, தேர்வு எழுதிய மாணவர்களைத் தேர்வு எழுதவில்லை எனக் குறிப்பிட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பெரும்பாலான மாணவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களில் பலர், அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் பல்கலைக் கழகத்தை அணுகி விளக்கம் கேட்டால், உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்குமாறு கூறுகின்றனர். பல்கலைக் கழகம் செய்த தவறுகளுக்கு மாணவர்கள் எப்படி பொறுப்பாக முடியும். ஏழை, எளிய, நடுத்தர வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச் சுமை உள்ளது. இதனால், பலர் கல்லூரிக் கல்வியைத் தொடர முடியாத நிலையே உருவாகும். பல்கலைக் கழக நிர்வாகம் சரிவர இயங்கவில்லை என்பதே பருவத்தேர்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. ஏற்கெனவே, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியதால் மாணவர்களிடம் கடும் எதிர்ப்பு உருவாகி கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டது. இப்போது, தேர்வு முடிவுகளிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. தேர்வுக் கட்டுப்பாட்டாளர் இத்தகைய குளறுபடிகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். பல்கலைக்கழக நிர்வாகத்தின் இத்தகைய செயல்கள் கடும் கண்டனத்துக்குரியது. குளறுபடி தொடர்பாக உரிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டு அதன்படி தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

தனது வீட்டில் வளர்க்கப்படும் பசு, ஈன்ற கன்றுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி!

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்