Rock Fort Times
Online News

தமிழ்நாடு, புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல்: வாக்குப்பதிவு நாளன்று கோர்ட்டுகளுக்கு விடுமுறை…!

தமிழ்நாடு சட்டசபைக்கு வருகிற 23-ந்தேதியும், புதுச்சேரி சட்டசபைக்கு வருகிற 9-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நாட்களில் அனைத்து கோர்ட்டுகளுக்கும் விடுமுறை அறிவித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் நீதிபதி எஸ்.அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவுகளில், புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வருகிற 9-ந்தேதி புதுச்சேரியில் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கும். தீர்ப்பாயங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்