Rock Fort Times
Online News

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்: ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் அதிகாரிகளை டிரான்ஸ்பர் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு..!

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாதம் இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலங்களில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. முதல் கட்டமாக எஸ்.ஐ.ஆர். பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக உள்ளது. அதன்பிறகு தேர்தல் ஆணையர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலத்திற்கு சென்று தேர்தல் நடத்துவதற்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள். இந்தநிலையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய 5 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்