Rock Fort Times
Online News

துறையூர் அருகே பாமாயில் தர மறுத்த ரேஷன் கடை பெண் ஊழியர் மீது தாக்கு: கடையை சூறையாடிய போதை ஆசாமி கைது…!

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த வைரிசெட்டிபாளையம் நடுத்தெரு பகுதியில் ரேஷன் கடை உள்ளது.  இந்தக் கடையின் விற்பனையாளராக சாந்தி (58) பணியாற்றி வருகிறார். இந்நிலையில்  கடந்த மாதம் பாமாயில் கிடைக்கப் பெறாதவர்களுக்கு இந்த மாதம் பாமாயில் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு  மது போதையில் வந்த செந்தில் (35), தனக்கு ஆகஸ்ட் மாதத்திற்குரிய பாமாயில் வேண்டும் என்று கேட்டுள்ளார்.  அதற்கு விற்பனையாளர் சாந்தி சென்ற மாதம் கிடைக்கப் பெறாதவர்களுக்கு கொடுத்து முடித்த பின்பே இந்த மாதத்திற்கு உரியவர்களுக்கு தர முடியும் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த செந்தில், விற்பனையாளர் சாந்தியிடம் தகராறு செய்ததோடு அவரை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது.  மேலும், ரேஷன் கடையில் இருந்த எடை போடும் இயந்திரம்,   பதிவேடு நோட்டு மற்றும் பாமாயில் பெட்டி ஆகியவற்றை சூறையாடி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசில்,  சாந்தி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து  செந்திலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்