Rock Fort Times
Online News

அரியலூர் மாவட்டம், சுத்தமல்லியில் இருந்து தா.பழூர் வழியாக சென்னைக்கு பேருந்து வசதி…* அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

அரியலூர் மாவட்டம், சுத்தமல்லி கிராமத்தில் இருந்து தா.பழூர், ஜெயங்கொண்டம் வழியாக சென்னை கிளாம்பாக்கத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சி மண்டலம் சார்பில் போக்குவரத்து வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான விழா இன்று( பிப்.10) நடைபெற்றது. விழாவில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்
சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு பேருந்து வசதியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் தசரதன், திருச்சி மண்டல பொது மேலாளர் டி.சதீஷ்குமார், துணை மேலாளர் புகழேந்தி ராஜ் மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்