திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை- * கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்!
திருச்சி மாவட்டம், மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் பிராட்டியூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு, பொது மக்களுக்கு சேவையாற்றுவதற்கு நேரடியாகவும், புரோக்கர்கள் மூலமாகவும் லஞ்சம் பெறப்படுவதாக திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், சேவியர் ராணி, பாலமுருகன் ஆகியோர் இன்று(ஜூலை 29) மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் இருந்தும் மற்றும் இரண்டு புரோக்கர்களிடமிருந்தும் மொத்தம் ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய கணக்கின்றி இருந்த அந்த பணம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.
Comments are closed.