Rock Fort Times
Online News

திருச்சியில் நாளை(நவ. 6) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு…!

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை (06.11.2025) வியாழக்கிழமை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வாளாடி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை நகர், கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், பச்சாம்பேட்டை வளைவு, டி.வளவனூர், மாந்துறை, பிரியா கார்டன், வாளாடி, தண்டாங்கோரை, எசனைக்கோரை, அப்பாத்துறை, தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், செம்பழனி, மேலவாளாடி, புதுக்குடி, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், நெருஞ்சலக்குடி, ஆங்கரை (சரவணாநகர், தேவிநகர், கைலாஸ்நகர்), நெய்குப்பை, ஆர்.வளவனூர், புதூர் உத்தமனூர், பல்லபுரம், வேளாண் கல்லூரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

இதேபோல துறையூர் மற்றும் புத்தனாம்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர் பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாப்பட்டி, முத்தையம் பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, காளிப்பட்டி, சி.எஸ்.ஐ., பெருமாள்மலை, சித்திரப்பட்டி, கொத்தம்பட்டி அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், களிங்கமுடையான் பட்டி, புத்தனாம்பட்டி, ஓமாந்தூர், அபினிமங்கலம், சாத்தனூர், திண்ணனூர், இலுப்பையூர், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூர், கோட்டாத்தூர், டி.களத்தூர், புலிவலம், தேனூர், பெரகம்பி, எதுமலை, தேவிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்