சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இச்சம்பவத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே தவக்கால் அடித்துக் கொண்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். இதை தற்போது எஸ்வி சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது., தமிழகத்தில் சட்ட – ஒழுங்கு சரியில்லை எனில் அண்ணாமலை ஏன் சவுக்கால் அடித்துக் கொள்ள வேண்டும் ? அவர் என்ன தமிழகத்தின் டிஜிபியா? முதல்வரா ? இவர் தன்னைத்தானே சவுக்கால் அடித்துக் கொண்டது பைத்தியக்காரத்தனம். கோமாளித்தனம். அண்ணாமலையை மாநில தலைவராக தேர்வு செய்தவர்கள்தான் தங்களை தாங்களே சவுக்கால் அடித்துக் கொள்ள வேண்டும். நல்வாய்ப்பாக நான் முன்கூட்டியே பாஜகவில் இருந்து விலகி விட்டேன்.இல்லை என்னை கூப்பிட்டு சவுக்கால் அடித்து இருப்பார்கள். இதையெல்லாம் பார்ப்பதற்கு கேவலமாக இருக்கிறது. அண்ணாமலை ஓர் அரசியல் பூஜ்ஜியம். இதை நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டேன். அண்ணாமலைக்கு நாக்கு மட்டும்தான் வேலை செய்கிறது. நல்லவேளை இனி வேட்டி கட்ட மாட்டேன் என்று சொல்லாமல் விட்டார் என நக்கலும் நையாண்டியுமாக அண்ணாமலையை எஸ்.வி சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Comments are closed.