உத்தரபிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் 2-வது நடைமேடைக்கு சாகுர் பாஸ்தி – மதுரா மின்சார ரயில் நேற்று ( 26.09.2023 ) இரவு 11 மணிக்கு வந்தடைந்தது. அப்போது அந்த ரயில் அதிக வேகம் காரணமாக நடை மேடையை உடைத்துக் கொண்டு ஏறி நின்றது. இதனால், பதற்றம் அடைந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர். ரயிலில் இருந்த பயணிகளும் அவசரம் அவசரமாக கீழே இறங்கினர். இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணி ஒருவர் காயம் அடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது ரயில் என்ஜின் தடம் புரண்டது எப்படி என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவத்தால் மதுரா – டெல்லி ரயில் பாதையில் ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டது. மால்வா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ், பாந்தரா டேர்மினல் உள்ளிட்ட பல ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் அவதி அடைந்தனர்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 950
Comments are closed, but trackbacks and pingbacks are open.