Rock Fort Times
Online News

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்…* சபாநாயகரிடம் அமமுக மனு..!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் அமமுக பொருளாளர் கரிகாலன் மனு அளித்துள்ளார். தவெக ஆட்சி அமைக்க முயற்சித்தபோது மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜிடம் தவெகவினர் கையெழுத்து வாங்கி, தங்களுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களிக்க குதிரை பேரம் நடத்தியதாக அ. ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக ஆளுநரிடம் புகார் அளித்தார். அதற்கு அடுத்த நாள் காமராஜை வைத்து செய்தியாளர்சந்திப்பையும் நடத்தி, தவெக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். இதனையடுத்து, சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தினகரனின் அனுமதியின்றி தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார் எஸ்.காமராஜ். இதனையடுத்து அவரை கட்சியில் இருந்து டிடிவி தினகரன் நீக்கினார். இந்நிலையில், குதிரை பேரத்திற்கு ஆட்பட்டு எஸ்.காமராஜ், தவெகவிற்கு ஆதரவளித்துள்ளதாகவும் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சட்டமன்ற சபாநாயகரிடம், அக்கட்சியின் பொருளாளர் கரிகாலன் மனு அளித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்